1/24/2006

பைபிள் கதைகள் - முன்னுரை

பல மதங்களின், கலாச்சாரங்களின் கதைகளைக் கேட்டும் படித்தும் மகிழ்ந்திருக்கிறேன். தமிழில் பைபிளில் உள்ள கதைகள் மற்றும் வரலாற்றை பதிப்பதை ஒரு பிரதி உபகாரமாக நினைக்கிறேன்.

பைபிள் என்பதற்கு 'புத்தகங்கள்' என்பது பொருள். பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரு பாகங்களாக பைபிள் பிரிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் கடவுளால் வழிநடத்தப்பட்ட வரலாற்றையும், அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் உட்கொண்டது பழைய ஏற்பாடு. இயேசுவின் பிறப்பு, போதனை, இறப்பு, உயிர்ப்பை எடுத்துரைக்கும் புத்தகங்களையும்(Gospels), முதல் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை குறிப்பும், அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனைகளும், திரு வெளிப்பாடும்(Revelations) புதிய ஏற்பாடு.

பைபிளின் ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் 1000 ஆண்டு இடைவெளிகளுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன. யூதர்களின் பண்டைய மொழியான எபிரேய மொழியில் பழய ஏற்பாட்டின் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் 31 புத்தகங்கள். இவற்றில் பல ஆபிரகாமின் வழிவந்த மதங்களான யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களுக்குப் பொதுவானவை.

தேவையான இடங்களில் மேலும் பைபிள் பற்றி தகவல்களிடுகிறேன்.

இந்தப் பதிப்பில் ஆங்கில பைபிள் ஒன்றிலிருந்து நானாகவே மறுமொழிபெயர்ப்பு செய்து கதை சொல்லும் பாணியில் வழங்குகிறேன். சில நுணுக்கங்கள் இந்த மொழிபெயர்ப்பில் சிதைய வாய்ப்புள்ளது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நானே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுருக்கமாக எழுதுவதையே நான் விரும்புவேன் எனவே கதைகள் ஓரளவு சுருக்கப்பட்டிருக்கும். பைபிளை முழுமையாக படித்து ஆத்மார்த்தமாக உணர விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு உகந்ததல்ல. இதைப்படிக்கும்போது வெறும் சுவாரஸ்யம் மட்டுமே மிஞ்சலாம்.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

3 Comments:

At 12:43 AM, Blogger பரஞ்சோதி said...

வாழ்த்துகள் அலெக்ஸ்.

பைபிள் கதைகளை பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள், நண்பர்கள் சொல்ல கேட்டதுண்டு, அதே ஆர்வத்தில் பைபிள் படிக்கத் தொடங்கினேன், பொறுமை இல்லாமல் வசனங்களை தவிர்த்து கதைகளை விரும்பி படித்தவன்.

மீண்டும் அக்கதைகளை உங்கள் வாயிலாக படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. பைபிளில் இருக்கும் அனைத்து கதைகளையும், பைபிளில் இல்லாத துணைக்கதைகளையும் கொடுங்க.

இதன் இணைப்பை சிறுவர் பூங்காவில் கொடுக்கிறேன்.

அன்புடன்
பரஞ்சோதி

 
At 7:12 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பரஞ்சோதி,
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. முடிந்தவரை எல்லா கதைகளுக்கும் இடம் உண்டு. நேரம்கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன்.

 
At 10:50 PM, Blogger Esha Tips said...

வாழ்த்துகள் அலெக்ஸ்

 

Post a Comment

<< Home