1/24/2006

3. சுட்ட பழம்

ஆதாம் ஏவாளின் சுகவாசத்தில் தந்திரமிகுந்த பாம்பு நுழைந்தது.
ஏவாளிடம் பாம்பு கேட்டது, "கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா?"
ஏவாள், "எல்லாம், ஆனால் நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அது மட்டும் விலக்கு. அதை சாப்பிட்டால் இறப்பு வரும்" என்றாள்.

பாம்பு அவளைப்பார்த்து,"அதெல்லாமொன்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்" என ஆசைகாட்டியது.

ஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.

கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.

அப்போது கடவுள் "ஆதாம் எங்இருக்கிறாய்" எனத் தேடிவந்தார்.
ஆதாம்,"நிர்வாணமாயிருப்பதால் மறந்திருக்கிறேன்" என்றான்.

"நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது?,
விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டாயா?", கடவுள்

"இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்", ஆதாம்

"இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது", ஏவாள்

கடவுள் பாம்பை சபித்தார்.

ஏவாளிடம், "உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மிண்டும் விரும்பும்படி செய்வேன்." எனக் கடிந்தார்.

பிறகு ஆதாமிடம்,"நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்" என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார்.

எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா சந்தோஷ வாழ்வினயும் ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.

4 Comments:

At 9:33 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

???

 
At 12:19 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அல்லி மகன்.. சில நேரங்களில் இப்படி வியபார யுத்திகளை கையாளவேண்டியுள்ளது.

 
At 3:35 AM, Blogger பரஞ்சோதி said...

சிரில் கவலை வேண்டாம்.

தொடர்ந்து படித்து பின்னோட்டம் போடுகிறேன் :).

 
At 7:13 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி பரஞ்சோதி

 

Post a Comment

<< Home