4. தம்பியை கொன்ற அண்ணன்
ஆதாம் ஏவாளை அறிந்தான். ("Adam knew eve". பைபிளில் ஒரு ஆண் ஒரு பெண்ணை 'அறிந்தான்' என்பதற்கு, தாம்பத்ய உறவு கொண்டான் என்று அர்த்தம்.)
இவர்களுக்கு முதலில் காயினும், பிறகு ஆபேலுமாய் இரு மகன்கள். காயின் விவசாயி, ஆபேல் ஆடுமெய்ப்பவன்.
ஒருநாள் காயின் கடவுளுக்கு காணிக்கையாக விளைச்சலில் கொஞ்சம் எடுத்து வைத்தான். ஆபேல் தன் ஆடுகளில் ஒரு தலைச்சன்குட்டியை எடுத்து அதன் சிறந்த பாகங்களை பலியாகத்தந்தான்.
ஆபேலின் பலி கடவுளுக்கு விருப்பமாக இருந்தது. அதை எற்றுக்கொண்டார். காயினின் பலியை ஏற்றுக்கொளளவில்லை.
காயின் இதனால் வன்மம் கொண்டான், ஆபேலை கொல்லத்துடித்தான்.
கடவுள் அவனிடம்,"பாவம் உன்னை அகப்படுத்தக் காத்திருக்கிறது, அதிலிருந்து உன்னை காத்துக்கொள்" என எச்சரித்தார்.
காயினின் வன்மம் வளர்ந்தது. தன் தம்பி ஆபேலை ஒரு வயல்வெளிக்கு அழத்துச்சென்று கொன்று போட்டான்.
கடவுள் காயினிடம்,"உன் தம்பி எங்கே?", என "என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?" என பதில் தந்தான் காயின்.
கடவுள் அவனை தூர நாட்டிற்கு ஓடிப்போகும்படி சபித்தார். "நான் தூர நாட்டிற்கு ஓடிப்போனால் என்னை கொன்று போடுவார்களே? இந்தத்தண்டனை கொடுமையானது." என காயின் முறையிட, கடவுள் அவனிடம், "உன்னை கொல்பவனுக்கு பலமடங்கு தண்டனை காத்திருக்கிறது." என்று கூறி, யாரும் அவனை கொல்லாதபடி அவன்மீது ஒரு அடையாளமிட்டார்.
காயின் மனமொடிந்து ஏதேனைவிட்டு தொலைதூரம் போய் வாழ்ந்தான்.
16 Comments:
நன்றி அல்லிமகன். நிச்சயம் படங்கள் தருவேன்.
அந்த காலத்துலேயே honor killingஆ?
:)
சாரி சாரி இது ஹானர் கில்லிங்க அகாது, கதைய தப்பா புரிஞ்சுகிட்டேன்.
சமுத்ரா,
வருகைக்கு நன்றி, தொடர்ந்து வருவீர்கள் என நம்புகிறேன்
சிறில்,
எனக்கு ஒரு சந்தேகம்.
கடவுள் ஆட்டின் பலியைதான் ஏற்றுக்கொண்டாரா?? இல்லை நீங்கள் தவறாக எழுதிவிட்டீர்களா??
சரியாக எழுதியுள்ளீர்களெனில்.. ஆட்டின் பலியை மட்டும் ஏன் ஏற்றார்.. தானியங்களை ஏன் ஏற்கவில்லை..
அன்புடன்
கீதா
கீதா உங்கள் சந்தேகம் நியாயமானது பைபிளில் ஏன் ஒன்றைவிட்டு மற்றொன்றை ஏற்றுக்கொண்டார் என்பதற்கான விளக்கமில்லை. ஆடு, தானியம் என்பதைவிட காயின் ஆபேல் என்பதுதான் பிரதானம்.
சின்ன ஒரு Clue பைபிளில் உள்ளது..
காயின் பூமியின் விளைச்சலை கொண்டுவந்தான் என்று வெறுமனே கூறும் பைபிள் ஆபேல் ஆட்டின் கொழுத்த பாகங்களை கொண்டு வந்தான் என்கிறது.
இருப்பதில் சிறந்ததை கடவுளுக்கு கொடுக்கும் எண்ணம் ஆபேலுக்கு இர்ந்தது என்பதை இந்த வரிகள் கூறுவதாக பொருள்கொள்ளப்படுகிறது.
சிறில்,
எனக்கு திருப்த்தி ஏற்படவில்லை.. நீங்கள் இது குறித்து பெரியோர்களிடம் கேட்டு எனக்கு தெளிவுறுத்த இயலுமா??
அன்புடன்
கீதா
கீதா,
இது போல இடைவெளிகள் பைபிளில் நிறைய உள்ளன. காயின் ஆபேல் கதை பல வடிவங்களில் சொல்லப்படுகிறது ... கீழேயுள்ள சுட்டியை படித்துப் பாருங்கள் விளக்கம் கிடைக்கலாம்.
http://www.pitt.edu/~dash/cain.html
புதிய ஏற்பாட்டில் எபிரேயர் 11:4 சின்ன விளக்கம் அளிக்கிறது.. நிச்சயம் நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான விளக்கம் இல்லை இதில். அதாவது 'நம்பிக்கை'(Faith) இருந்ததால்தான் ஏபேலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாம்.
இப்பொதைக்கு என்னால் முடிந்தது இது :)
கீதா... நம்ம விக்கியிலும் கொஞ்சம் விவரங்கள் இருக்கு படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Cain_and_Abel
கீதா கேட்டிருக்கும் கேள்வி நியாயமானதே. இவ்விவாதம் அவ்வப்போது எங்காவது நடைபெற்றுள்ளது, ஆனால் பெருமளவில் இது சர்ச்சைக்குள்ளானதில்லை.
"காயின் மனப்பூர்வமாகக் காணிக்கையைக் கொடுக்வில்லை. தன் விளைச்சலில் நல்லதல்லாதவற்றையே காணிக்கையாக்கினான். ஆனால் ஆபேல் அப்பிடியில்லை" என்ற காரணத்தைச் சொல்ல முடியும்.
காயினை வஞ்சிக்கப்பட்டவனாகவும், ஆபேலை கடவுளின் செல்லப்பிள்ளையாகவும் சித்தரித்து மாற்றுக் கதைக்களங்களுண்டு. யாழ்ப்பாணத்தில் இப்பார்வையில் ஒரு நாடகப்பிரதி பார்த்திருக்கிறேன். அதில் கடுமையான உழைப்பாளி காயின் கடவுளாற் புறக்கணிக்கப்படுவதாகவும், ஆபேல் அவரின் செல்லப்பிள்ளையாகவுமிருப்பதாக இருக்கும். அத்தோடு ஊதாரிப்பிள்ளையின் உவமையையும் இணைத்திருப்பார்கள். அதிலும் உழைப்பாளி மகன் புறக்கணிக்கப்படுவதையும் சொத்துக்களைக் கொண்டு ஓடிப்போய் திரும்பி வந்த ஊதாரி மகன் கொண்டாடப்படுவதையும் காட்டி அந்த வாதத்துக்கு வலுச் சேர்க்கப்பட்டிருக்கும். (இதே கதைக்களத்துக்கு வலுச்சேர்க்க விவிலியத்தில் இன்னும் பல சம்பவங்களுள்ளன.)
காயின் கெட்டவன், ஆபேல் நல்லவன் என்ற கருத்தை முன்பேயே வாசகர்களின் மனத்தில் விதைத்துவிட்டுத்தான் காயின் - ஆபேல் கதையைச் சொல்ல முடியும். அப்படித்தான் 'மறைக்கல்வி' வகுப்புக்களிலும் விவிலியத்திலும் கதை சொல்லப்படுகிறது.
எனக்கு மாற்றுக் கதையாடல்கள் பிடிக்கும் (அண்மையின் குழலி எழுதிய அபிமன்யு உட்பட).
**********
ஊதாரிப்பிள்ளையின் உவமையுட்பட அவை சொல்லப்பட்ட காரணங்களும் அவை மூலமான படிப்பினைகளும் வேறானவையென்ற தெளிவு என்னிடமிருக்கிறது. ஆனால் தர்க்கம் என்ற அளவிலே மாற்றுப்பார்வைகளை ஏற்படுத்த முடியும், அவற்றை இரசிக்க முடியும். இவைகள் புனைவுகளே என்ற தெளிவோடுதான் நான் இவற்றை அணுகுகிறேன்.
*********
இங்கு ஒரு சின்ன ஐயம். தூர தேசம் போனால் யேன் காயினைக் கொன்று விடுவார்கள்?
ஏனென்றால் அப்பொழுது ஆடம் ஈவ் தவிர்த்து உலகில் மக்கள் இல்லாது இருந்தார்கள் அல்லவா. அவர்கள் தானே முதல் மக்கள்!
ராகவன்,
சரியான ச்ந்தேகங்கள் பைபிளில் நிறைய இடைவெளிகள் (விடுபட்ட பகுதிகள் அல்லது சொல்லாமல் விடப்பட்டவை) நிறைய இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில்கூட இயேசுவின் சிறுவயுஅது பற்றிய குறிப்புகள் இல்லை.
இதற்கெல்லாம் ஒத்த கால வரலாற்றுக்குறிப்புகளிலிருந்து சில விளக்கங்கள் பெறப் படுகின்றன.
என்னால் பல கேள்விகளுக்கு நிச்சயமாக பதில் சொல்ல முடியாது. பைபிளின் பல புத்தகங்களுக்கு முன்னுரைகளும் விளக்க உரைகளும் உள்ளன, என்னிடம் How to read the Bible என்ற புக் இருக்குது.. சென்னையில். :)
சீரியசா தெரிஞ்சுக்கணும்னா ஒரு கூகிள் தேடல் போடுங்க.. பதில் கிடைச்சாலும் கிடைக்கும்.
Sorry if I disappointed you.
அலெக்ஸ்,
கெயின் ஏபல் யாரை திருமணம் செய்துகொண்டார்கள்?ஆதம் ஏவாள் தான் முதல் மனிதர்கள்,கெயின் ஏபல் அவர்களின் மகன்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்ய பெண் கிடைத்தது எப்படி?
இல்லை. சிறில். அப்படியில்லை. தெரிஞ்சிக்கிறனுமுன்னு கேட்ட கேள்விதான அது. அதுனால நீங்க என்னை ஏமாத்தலை. நேரம் கிடைக்கும் பொழுது கூகுளாண்டவர்கிட்ட கேட்டுப் பாக்குறேன். :-)
இந்த கதையை கதையா மட்டும் தான் பார்க்கனும்.நம்ம ஊர் நறி-காக்கா-வடை திருட்டு கதை மாதிரி.
அது எப்படி காக்கா பேசும்ன்னு யாராவது கேள்வி கெட்டது உண்டா?
;-)
கடவுள் மீது பயம் ஏற்படவும், moralityயை நம்ம மூளையில் install செய்யவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதபட்ட கதைகள் இவை.
செல்வன்..
சமுத்ரா சொல்லுயிருப்பதுபோல பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பவை சில வெறும் கதைகளாகவே அறியப்பட்டுவந்திருக்கின்றன.வரலாறும் உள்ளது அதுவும் கதைகளாகவே அறியப்ப்ட்டு பின்னர்தான் எழுதப்பட்டன.
வெறும் கதை சொல்கிற நோக்காம்தான் என்னது.I have no intension of doing anything more even clarifuying any questions that may make you think one way or the other.
ராகவனுக்கு நான் சொன்ன பதில்தான் உங்களுக்கும்... பைபிளில் இடைவெளிஉகள் உள்ளன..சிலர் இதற்கான விடைகளை வைத்துள்ளனர் கூகிளைத் தேடவும்..
Post a Comment
<< Home