2/13/2006

5. நோவாவின் பெட்டகம்


இந்தக்கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆதாம் ஏவாளுக்குப் பின் பத்து தலைமுறைகளுக்குப் பிறகு நோவா தோன்றுகிறார். இந்த நேரத்தில் உலகத்தில் மனித இனம் பாவம் மிக்கதாய் ஆகிவிட்டது.

கடவுள் ஏனிந்த மனிதனைப் படைத்தோமோ என மனமுடைந்து, உலகை அழித்துவிட நினைத்தார்.

நோவாவும் அவரது குடும்பமும் கடவுளுக்கு நேர்மையாய் இருந்ததைக்காண்டு கடவுள் நோவாவிடம், "பெரும் வெள்ளப்பெருக்கு ஒன்றை ஏற்படுத்தி இந்த உலகை அழிக்கப்போகிறேன். ஒரு பெட்டகம் (பெரிய அறைகளுள்ள படகு) ஒன்றை செய். உலகிலுள்ள உயிரினங்களில் அனைத்திலும் ஒரு ஜோடியை எடுத்துக்கொண்டு உன் குடும்பத்தோடு அந்தப் படகில் ஏறி வெள்ளத்திலிருந்து உன்னை காப்பாற்றிக்கொள்." என்றார்.

நோவா ஒரு பெரிய படகை கட்டுவதை கண்டவர்கள் அவரை ஏளனம் செய்தனர். 'இவனுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?' என எள்ளினர். நோவா கடவுளின் திட்டத்தை அவர்களுக்கு கூறி மனம் திரும்பச் சொன்னார். அவர்கள் நோவாவை கண்டுகொள்ளவில்லை.

சில நாட்களுக்குப்பின் பெரும் மழை பெய்ய குளங்கள் நிரம்பி வழிந்தன, ஆறுகள் கரையை உடைத்துவிட்டு ஊரை அழிக்கக் கிளம்பின. உலகம் நீரினால் நிரம்பியது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழையும் வெள்ளமும் வந்து, உலகை அழித்தது.

நோவாவின் குட்ம்பத்தினரும் அவர் பெட்டகத்திலிருந்த விலங்குகளும் வெள்ளத்திலிருந்து உயிர்தப்பினர்.

ஒரு வருடத்திற்குப்பின் வெள்ளம் வடிந்தது. நோவாவின் பெட்டகம் ஒரு குன்றின்மேல் தட்டி நின்றது.

நோவா ஒரு பறவையை பறக்கவிட அது ஒரு செடியின் கிளையை பறித்துவந்து தந்தது. பெட்டகம் திறக்கப்பட்டு எல்லோரும் வெளியேறி கடவுளுக்கு நன்றி செய்தனர்.

கடவுள் நோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். "இனிமேல் இதுபோன்று வெள்ளத்தால் உலகின் எல்லா உயிரினங்களும் சாகும்படி செய்யமாட்டேன். இந்த ஒப்பந்தத்தை நினைவு கொள்ள வானவில்லை உருவாக்குகிறேன். ஒவ்வொருமுறை மழை பெய்யும்போதும், வானவில் தோன்றி இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கும்" என்றார் கடவுள்.

6 Comments:

At 9:40 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அல்லிமகன்,

மிக்க நன்றி. சிறுவர் பூங்கா லிங்க் கொடுப்பதாக பரஞ்சோதி சொன்னார் அதனால எளிய வார்த்தைகளை உப்யோக்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் பாரட்டுக்கு நன்றி.

படங்கள் உங்கள் idea தானே, அதற்கும் நன்றி.

 
At 10:33 AM, Blogger Santhosh said...

அலெக்ஸ் கலக்கலா கதை செல்லி இருக்கிங்க. ஆனா என்னிக்கி சாமி மனுசன் மட்டும் சென்ன சொல்லை காப்பத்துறானா நான் மட்டும் ஏன் காப்பத்தனும் அப்படின்னு வானவில் மேட்டரை மறக்க போறாருன்னு தெரியலை.

 
At 10:45 AM, Blogger பரஞ்சோதி said...

சிரில்,

நோவாவின் கதை அருமை.

உங்க பதிவை சிறுவர் பூங்காவில் சொல்லியிருக்கிறேன்.

மேலும் என்னிடம் அனைத்து பைபிள் கதைகள் கொண்ட சினிமா படங்கள் இருக்கின்றன. அதில் நோவா ஆர்க் என்ற படமும் இருக்கிறது. முன்பு பார்த்தது, மீண்டும் பார்க்க ஆவல் தூண்டுகிறது உங்கள் பதிவு.

எளிமையாக, நகைச்சுவை கலந்து கொஞ்சம் அதிகமாக எழுதுங்க, குழந்தைகளுக்கு கதையாக சொல்ல வசதியாக இருக்கும். கொஞ்சம் கஷ்டம் தான், போக போக சரியாகி விடும்.

 
At 10:46 AM, Blogger பரஞ்சோதி said...

அல்லி மகன்,

உங்க வலைப்பூ எங்கே இருக்குது.

தொடர்ந்து சிரிலுக்கு ஆதரவு கொடுங்க.

 
At 11:23 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சந்தோஷ்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

 
At 11:25 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பரஞ்சோதி,
நன்றி. குழந்தைகளுக்காக என்றில்லாமல் பொதுவாக எழுதத்தான் விரும்புகிறேன். ஆனா நீங்க குழந்தைகளுக்காக இணைப்பு கொடுத்ததால கொஞ்சம் கவனத்தோடே எழுத வேண்டியுள்ளது.

தொடர்ந்து உங்கள் பரிசீலனைகளைத் தாருங்கள்.

 

Post a Comment

<< Home