3/15/2006

26. எரியும் புதர்

மோயீசன், மாமன் ஜெத்ரோவின் ஊரில் ஒரு ஆயனாக மாறி வருடங்கள் பல போனது.

ஒருநாள் ஆடு மேய்க்கையில் மலைமீது ஒரு பசுமயான புதரில் தீ எரிந்துகொண்டிருந்ததை கண்டார். தொடர்ந்து எரிந்தும் புதர் சாம்பலாகாமல் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.

மோயீசன் அதை ஆராயும்படி மலையேறினார். புதருக்கு அருகில் போகும்போது ஒரு குரல் கேட்டது,"மோயீசன் உன் காலணிகளை கழற்றிவிட்டு வா". பயந்தபடியே மோயீசன் தன் செருப்புக்களை கழற்றிவிட்டு புதரின் அருகே சென்றார்.

மீண்டும் அந்தக் குரல் பேசியது,"மோயீசன், உன் முன்னோர்களின் கடவுள் நானே. எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை களைய நீ சென்று அவர்களை அழைத்து வந்து இந்த மலையில் என்னை வழிபடு" என்றது.

மோயீசன் இந்த பெரும் பொறுப்பை ஏற்க தயங்கினார். "நானா? நான் எப்படி பாரோவின் முன்னால்... இஸ்ராயேல் இனத்தையே வழிநடத்த என்னால் முடியுமா?" என்றார்.

கடவுள்,"நான் உன்னோடிருக்கிறேன்" என்றார்.

மோயீசன் இன்னும் நம்பிக்கையில்லாதிருந்தார். "எனக்கு சரியாக பேச வராதே?" என்றார். கடவுள்,"ஆரோன் உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறான் அவன் உனக்குப்பதிலாக பேசுவான்" என்றார்.

இன்னும் மோயீசனுக்கு நம்பிக்கை வராததால் கடவுள் மோயீசன் வைத்திருந்த ஆடு மேய்க்கும் தடியை கீழே போடச் சொன்னார். அது உடனே பாம்பாய் மாறியது. மோயீசன் பயந்து போனார். "உன் கையை உன் கச்சையினுள் விட்டு எடு" என்றார் கடவுள் மோயீசன் கையை ஆடைக்குள் விட்டு எடுக்கையில் அவர் கை தொழு நோய் பிடித்திருந்தது. மீண்டும் அவ்வாறு செய்கையில் பழையபடி குணமுற்றிருந்தது.

"எகிப்திலிருந்து இஸ்ராயேலர்களை விடுவிக்கும்படிக்கு அவர்களுக்கு சில அடையாளங்களை காண்பிப்பேன்." என்றார் கடவுள்.

மோயீசனும் தன் மக்களை மீட்க தன் மாமனார் ஜெத்ரோவிடம் விடைபெற்றுக்கொண்டு எகிப்து நோக்கி பயணித்தார். வழியில் ஆரோன் அவரை சந்தித்தார்.

இருவரும் எகிப்தை அடைந்து அங்குள்ள எபிரேய தலைவர்களை அழைத்து பேசி கடவுளின் மீட்புத் திட்டத்தை அறிவித்தனர். எபிரேயர் கடவுளைப் புகழ்ந்து மகிழ்ந்தனர்.

3 Comments:

At 9:22 AM, Blogger G.Ragavan said...

இந்தக் கதையை Ten Commandments படத்தில் பார்த்திருக்கிறேன். மோசஸின் கதையைச் சிறப்பாகச் சொல்லியிருப்பார்கள்.

சீனாய் மலையுச்சியில்தானே அந்தப் புதர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது? இது பற்றி ஜோசப் சார் கூட ஒரு பதிவில் சொல்லியிருந்தார்.

 
At 12:48 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சினாய் மலைதான்.

 
At 10:13 PM, Blogger ரவி said...

இப்போது தான் கண்ணில் பட்டது உங்கள் பதிவு...நல்ல முயற்ச்சி...

வாழ்த்துக்கள்...

 

Post a Comment

<< Home