3/01/2006

16. ஈசாக்கின் ஆசீர்

ஆபிரகாமின் மகன் ஈசாக்குக்கு வயதாகி தள்ளாடும் நிலையில் அவரது ஆசீரை தன் மூத்தமகன் எசாவுவிற்கு அளிக்க விரும்பினார். ஈசாக்கு எசாவுவை மிகவும் நேசித்தார். ஈசாக்கின் மனைவி ரெபெக்கா யக்கொபுமீது பாசம் வைத்திருந்தாள்.

ஈசாக்கு எசாவுவை அழைத்து," கட்டிற்குப்போய் வேட்டையாடி கறி சமைத்து எனக்கு கொண்டு வா. என் ஆசீரை உனக்கு அளிக்கிறேன்." என்றார். இதை ரெபெக்கா கேட்டாள். தன் செல்லப்பிள்ளை யாக்கோபுவிற்கு இந்த ஆசீர் கிடைக்கச் செய்ய எண்ணினாள். யாக்கோபுவை அழைத்து,"உன் தந்தை தன் ஆசீரை எசாவுவுக்கு வழங்க இருக்கிறார். நீ போய் நாந்தான் எசாவு எனச் சொல்லி அந்த ஆசீரை வாங்கிக்கொள். கண்பார்வை குறைந்த ஈசாக்கால் உன்னை சரியாக அடையாளம் காண முடியாது." என்றாள்.

தன் தந்தையை வஞ்சிக்க யாக்கோபு தயங்கினான். ரெபெக்கா அவனை சமாதானம் செய்தாள். யாக்கோபு ரெபெக்காவிடம்,"அண்ணன் கைகளில் அடர்ந்த ரோமம் இருக்குமே அப்பா அதை வைத்துக் கண்டுபிடிக்க மாட்டார?" எனக் கேட்டான்.

ரெபெக்கா கறிசமைத்து யாக்கோபுவிடம் கொடுத்து கைகளில் ரோமம் தெரியும்படி விலங்கின் தோலை அவன் மேல் உடுத்தி ஈசாக்கிடம் அனுப்பிவைத்தாள்.

ஈசாக்கு யக்கொபின் குரலை அடையாளம் கண்டுகொண்டார், ஆனால் கைகளைத் தொட்டுப் பார்க்கையில் அவை எசாவுவின் கைகள் போல இருக்கவே வந்திருக்கும் யாக்கோபுதான் தன் பிரிய மகன் எசாவு என நம்பி தன் ஆசீரை அவனுக்கே வழங்கினார்.

சற்று நேரம் கழித்து எசாவு வந்தான். தன் தம்பி மீண்டும் தன்னை
வஞ்சித்து தனக்குச் சேரவேண்டியதை பெற்றுக்கொண்டதை அறிந்தான், கோபம் கொண்டான். ஈசாக்கு இறந்தபின் யாக்கொபை கொல்லத் திட்டம் போட்டான்.

ஈசாக்கும் ரெபெக்காவும் எசாவுவுக்குப் பயந்து யாக்கோபை ரெபெக்காவின் உறவினர்கள் வாழ்ந்த ஹாரன் நாட்டிற்கு அங்கேயே பெண்பார்த்து மணம் முடிக்கும்படி அனுப்பிவைத்தனர்.

2 Comments:

At 10:23 AM, Blogger பரஞ்சோதி said...

நான் எங்க வீட்டிலேயும் என் அம்மாவிடம் அடிக்கடி சண்டை போடுவேன், நீங்க என்னை விட என் தம்பிக்கு அதிக பாசம் காட்டுறீங்கன்னு.

அதுக்கு அம்மா சொல்லுவாங்க "அய்யா, நீ படிச்சவன், பலச்சாலி, உன்னால் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்ள முடியும், ஆனா தம்பிக்கு ஒன்றுமே தெரியாது, அப்பாவி" என்பாங்க.

 
At 12:51 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்லவேளை எனக்கு தம்பி இல்லை. கடைக்குட்டி.

 

Post a Comment

<< Home