2/13/2006

6. பாபேலின் கோபுரம்


நோவாவிற்குப் பிறகு பல தலைமுறைகள் கடந்தபின், உலகம் மீண்டும் பாவபூமியானது. மனிதர்கள் கடவுளை மறந்து தங்கள் பெருமைகளில் ஊறிக்கிடந்தனர்.

எல்லோரும் ஒன்றாய்க்கூடி "நாம் நமெக்கென, வானகங்களை முட்டுமளவிற்கு கோபுரம் ஒன்றை எழுப்புவோம். நாம் பிரிந்து பூமி எங்கும் பரவிப் போகாமல் அதில் ஒன்றாய் வாழலாம். நம் புகழை அந்தக் கோபுரம் நிலைநாட்டும்" என முடிவெடுத்து பாபேலின் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர்.

கோபுரம் உயர்ந்தது. மனிதனின் கர்வமும் உயர்ந்தது. கோபுரம் வானை எட்டுமளவுக்கு வளர்வதைக்கண்டு கடவுள், "இவர்கள் ஒன்றாய், ஒரே மொழி பேசுபவர்களாய் இருப்பதினால் இப்படி தங்களால் முடியாததெதுவுமில்லை என நினைக்கிறார்கள். இவர்கள் பல மொழிகள் பேசுபபவர்களாக மாறட்டும்." என்றார்.

அப்படியே பூமியின் மக்கள் வெவ்வேறு மொழிகளை பேச ஆரம்பித்தனர். ஒருவர் சொல்வது மற்றவர்க்குப் புரியாமல் போனதால் கூட்டம் கூட்டமாய் பிரிந்து தனித்தனியாய் வாழ ஆரம்பித்தனர்.

பாபேல் (அ) பாபிலோன் என்பதற்கு 'குழப்பம்' என்று பொருள்.

16 Comments:

At 8:26 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அல்லி மகன்,
உங்கள் பதிவு பார்த்தேன்.
பின்னூட்டமிட்டுள்ளேன்.

 
At 10:59 AM, Blogger சன்னாசி said...

பீட்டர் ப்ருஹேல் வரைந்த பாபேல் கோபுரங்களைப் பற்றிய இரண்டு ஓவியங்கள் பிரசித்தமானவை - அவை இங்கே மற்றும் இங்கே

 
At 11:40 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அழகான ஓவியங்கள், நன்றி சன்னாசி

 
At 6:52 PM, Blogger dondu(#11168674346665545885) said...

பேபல் கோபுரம் இப்போது உலகில் நிலவி வரும் பன்மொழி நிலையைக் குறிக்கிறது. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் இதை எங்கள் தொழிலின் குறியீட்டாக நினைக்கிறோம். என்னுடைய மொழிபெயர்ப்பு வலைத் தளத்திலும் அக்கோபுரம் உள்ளது. பார்க்க: http://www.nrtranslatorinterpreter.com/

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலூம் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 7:47 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

டோண்டு சார். வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி.

எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று பாபேலின் கோபுரம். பல மொழிகளை மனிதன் ஏன் பேசுகிறான் என்பதற்கு ஒரு எளிய விளக்கம்.

 
At 8:30 PM, Blogger Amar said...

சரோஜினி நாயுடு நேருவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தான் முதன்முதலில் நான் babel tower என்ற வார்த்தைய பார்த்தேன்.அதுவும் எட்டாம் வகுப்பு பாடபுத்தங்களில்.

 
At 9:18 PM, Blogger பரஞ்சோதி said...

அல்லி மகன்,

உங்க வலைப்பதிவுக்கு வருகை தருகிறேன்.

சிறில்,

பாபேலின் கோபுரத்தின் கதையான அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்று. இறைவனே பல மொழிகளையும், பல இனங்களையும் விரும்பி படைத்திருக்கிறார்.ஆக நாம் அவற்றில் பேதம் பார்ப்பது இறைவனுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மொழியில் பாபேலின் கோபுரம் படத்தை பார்த்தேன், அருமையாக இருந்தது.

 
At 12:14 AM, Blogger சன்னாசி said...

வாய்ப்பிருப்பின் இதையும் படித்துப் பார்க்கவும்

 
At 6:59 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சமுத்ரா,
பகிர்வுக்கு நன்றி. பரவலாக பயன்படுத்தப்படுகிற ஒரு உவமை இது.

 
At 6:59 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பரஞ்சோதி,
பகிர்வுக்கு நன்றி.

 
At 7:00 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சன்னாசி,
படிக்கத்துவங்கினேன் கொஞ்சம் குழப்பியது. பாபேலின் கோபுரமென்றாலே குழப்பமா?

நேரம் கிடைக்கும்போது மீண்டும் படிக்கிறேன்.

பகிற்வுக்கு நன்றி.

 
At 9:55 AM, Blogger NONO said...

//பல மொழிகளை மனிதன் ஏன் பேசுகிறான் என்பதற்கு ஒரு எளிய விளக்கம்//
இதையெல்லாம் நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா?!!

 
At 10:06 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

oliyinile,
நிச்சயம் நம்பவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ஒரு சின்ன கதை ஒரு பெரிய கேள்விக்கு பதிலாயிருந்துள்ளது என்பதை வியக்கிறேன்.

மதங்களே நாமெல்லாம் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளல்லவா? இவையும் சிலருக்கு வெறும் கதைகளாகவும் மற்றவருக்கு வேதமாகவும் தோன்றுமே.

நான் சொல்லவந்தது மொழிகள் எப்படி தோன்றின என்பதற்கு இந்தக்கதை ஒர் எளிய விளக்கம் தருகிறது என்பதுதான்.இதை அலசிப்பார்த்தால் பல சித்தாந்தக் கருத்துக்கள் தோன்றும். அப்படி படிக்க பைபிளின் மூல எழுத்துக்களையும் யூதர்களின் வரலாற்றையும் என்று பல மூலங்களைத் தேடிப்போகவேண்டியிருக்கும்.

 
At 10:13 AM, Blogger NONO said...

மதங்கள் மனிதன் உருவாக்கியது!! அதாவது மற்றவர்களை அடிமையாக்க பயமுறுத்த சிறந்த ஆயுதமாய் மதத்தை பயன்பதுத்தினான் என்பது எனது கருத்து!!! அது சரி பைபிளின் படி நோவா எந்த ஆண்டு வாழ்தார்?

 
At 10:31 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பைபிளில் ஆண்டு கணக்கு சொல்லப்படவில்லை என நினைக்கிறேன்.

இந்த சுட்டியை பாருங்கள்

http://www.flood-myth.com/ages.htm

 
At 10:32 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

மதம் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் நம்பிக்கை உள்ளது..

:)

 

Post a Comment

<< Home