2/21/2006

10. சோதோமும், கொமெராவும், ஒரு உப்புக்கல் சிலையும்


இரு தேவ தூதர்களும் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து தங்கினர். உணவருந்தியபின் லோத்துவிடம்,"பாவங்களின் பேரில் சோதோமும் கொமெராவும் கடவுளால் அழிக்கப்படவிருக்கின்றன. நீ உன் மனைவியோடும் மகள்களோடும் சோதோமை விட்டு உடனே வெளியேறு" என்றனர்.

லோத்து தன் மருமகன்களை தம்மோடு வருமாறு கெஞ்சினார். அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்காமல் சோதோமில் தங்கினர்.

லோத்துவும் அவர் மனைவியும் மகள்களும் சோதோமை விட்டு வெளியேற மனமின்றி நின்றுகொண்டிருந்தபோது தேவதூதன் அவர்களை கைபிடித்து அழைத்துச்சென்று,"சோதோமிலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போங்கள், திரும்பிப் பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள்", எனக்கூறி சோதோமிலிருந்து அவர்களை வெளியேற்றினார்.


லோத்துவின் குடும்பம் வெளியேறியதும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சோதோம் கொமெரா மீது
விழுந்தன. இரு பாவ நகரங்களும் அதன் அருகிருந்த சில நகரங்களும் பற்றி எரிந்தன.

லோத்துவின் மனைவி கடவுளின் ஆணையை மறந்து எரியும் நகரங்களை திரும்பி பார்த்தாள். பார்க்கவும் உப்புக்கல் சிலையாய் மாறினாள்.

9 Comments:

At 7:22 PM, Blogger Boston Bala said...

திரும்பிப் பார்த்தால் கல்லாக சபிக்கப்படுவது என்னும் குறியீடு சங்கரர்-சரஸ்வதி குறித்த கதையிலும் கேள்விப்பட்டிருக்கிறேன். (ட்ரிப் எப்படி போச்சு?)

 
At 6:58 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பயங்கர குளிர். 20 below 0. காசினோல ட்ரிப் செலவு பாதி கெடச்சுது :)

திரும்பி ஊருக்கு வந்தா 5 இஞ்ச் Snow விழுந்து கிடக்குது. ஆர்கன்சாவுல Snow Clearing வசதிகள் இல்ல. ஐந்தாறு வருஷங்களுக்கு ஒருமுறைதான் பனிவிழுமாம். அப்படா வீடு வந்து சேர்ந்துட்டொம்னு இருந்துச்சு.

St. Louis சர்ச்ல ஒரு குழு பாடிக்கிட்டிருந்தாங்க ரெம்ப நல்லா இருந்துச்சு.. Also the church itself was very very beautiful. Arch இரண்டுதடவ பாத்தாச்சு அதனால போகல.

 
At 8:44 AM, Blogger G.Ragavan said...

திரும்பிப் பாக்காதே விஷயங்கள் நிறைய கதைகளில் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளில் கூட உண்டு. திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சொல்லும் பொழுதெல்லாம் யாராவது ஒருவர் திரும்பிப் பார்த்து விடுகிறார்கள்.

சிறில், அந்த உப்புச்சிலை என்னவாயிற்று? அதை அபிரகாம் என்ன செய்தார்? ஒருவேளை அது அடுத்த கதையோ!

 
At 11:00 AM, Blogger Boston Bala said...

நன்றி. 'தேன்'இல் படங்களுடன் பதிவு போடுங்க... (சிகாகோவில் இருந்தபோது எட்டிப் பார்த்தது...)

 
At 11:46 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த விடையும் பைபிளில் இல்லை.

பழையகால கதிஅகளுக்குள் இருக்கும் பல ஒற்றுமைகளை காணமுடிகிறது. திரும்பி பார்க்காதே என்பது உட்பட.

இந்தத்தொடரின்மூலம் பழைய கதைகளுக்குள் இருக்கும் இதுபோன்ற ஒற்றுமைகளை காணமுடியும் என நம்புகிறேன்.

 
At 11:48 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பாலா,
தெனில் பதிக்க எண்ணம். வேலைப் பழு அதிகமாகிவிட்டது.

விரைவில் எதிர்பார்க்கலாம்.

 
At 9:01 AM, Blogger Ram.K said...

ஒரே பதிவில் இரண்டு பதிவுகள்.
!!!
உங்கள் பதிவில் கதையையும், பின்னூட்டத்தில் பயண அனுபவங்களையும் தெரிந்து கொண்டேன்.

நன்றி

 
At 1:12 PM, Blogger பரஞ்சோதி said...

சிறில் சிலையாவது பற்றி பல படங்களில் பார்த்திருக்கிறேன், பைபிளிலும் இப்படி ஒரு சம்பவமா.

அப்புறம் என்ன ஒரு திரை அடிக்கடி வந்து பைபிள் அட்வென்சர்.காம், பாஸ்வோர்ட், லாகின் நேம் கேட்குது, நீங்க தான் கொடுத்திருக்கீங்களா?

 
At 1:47 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பரஞ்சோதி,

ஒரு வலைத்தளத்திலிருந்து சில படங்களை பயன்படுத்தியிருந்தேன் அந்த தளத்தில் எதோ ப்ராப்ளம்.

இப்போ மாற்றிவிட்டேன்.

 

Post a Comment

<< Home