2/15/2006

7. ஆபிரகாம்



பாபேலின் கோபுரக் கதைக்கு அடுத்ததாக பைபிளில் சில சந்ததிகள் பட்டியலிடப்படுகின்றன. அதில் ஆபிரகாம் கடைசியாக வருகிறார்.

ஆபிரகாம் 'ஊர்'(Ur) என்கிற ஊரில் வாழ்ந்துவந்தார். ஆபிரகாமும் அவர் தந்தையும் ஆடுமேய்ப்பவர்கள். கடவுள் ஆபிரகாமை சொந்த நாட்டைவிட்டுக் கிளம்பி தான் காட்டும் நாட்டிற்கு பயணிக்கச் சொன்னார். ஆபிரகாம் துவங்கிய இந்தப்பயணம் யூதர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு நெடும்பயணமாக மாறியது.

ஆபிரகாம் பல நாடுகளுக்குச்சென்று வாழ்ந்துவிட்டு கடைசியாக எகிப்துக்குச் செல்கிறார். ஆபிரகாமின் சகோதரரின் மகன் லோத்தும்(Lot) அவரோடு செல்கிறார்.

ஆபிரகாமின் மனைவி சாரா, அழகான பெண். எகிப்தில் நுளையுமுன் ஆபிரகாம் சாராவின் அழகைக்கண்டு எகிப்தியர்கள் தன்னைக் கொன்றுவிட்டு அவளை அபகரிக்கக்கூடும் என நினைத்து சாராவிடம், "நீ என் மனைவி எனச் சொல்லாதே சகோதரி எனக் கூறு" என்கிறார். ஒருவகையில் இது உண்மையானது. சாரவிற்கும் ஆபிரகாமிற்கும் தந்தை ஒருவரே.

ஆபிரகாம் நினைத்தது போலவே சாராவின் அழகில் மயங்கி எகிப்திய மன்னன், பாரோ, ஆபிரகாமுக்கு பொன்னும் பொருளும் அழித்து சாராவை அடையப் பார்க்கையில் கடவுள் ஒரு பெரும் நோய்க்கு எகிப்தியர்களை ஆளாக்கினார்.

பாரோ பின்னர் சாரா ஆபிரகாமின் மனைவி என்பதைத் தெரிந்துகொண்டு, "நீ ஏன் என்னிடம் பொய் சொன்னாய். இதோ எனக்கு நோய் வந்ததற்கு காரணம் நீதான். உடனே உன் மனைவியை அழத்துக்கொண்டு எகிப்தை விட்டு வெளியேறு" என்றான்.

ஆபிரகாமும் எகிப்தைவிட்டு வெளியேறி தான் முன்பு வாழ்ந்து வந்த கானான் நாட்டிற்கு திரும்பினார்.

லோத்து சாதோம் கொமரா நகரங்களுக்கிடயே குடிபுகுந்தான், ஆபிரகாம் கானான் நாட்டிலே வாழத்துவங்கினார்.

9 Comments:

At 2:05 PM, Blogger Boston Bala said...

I am reading every part religiously. Nice narration. Thx :-)

 
At 2:42 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

thanks Bala. nice pun 'religiously'... :)

continue reading. Your feedback is valueable indeed.

Hope you did not have to plough out snow last weekend? My brother is in NJ and was complaining.

 
At 2:43 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அல்லி மகன்.
அடுத்த சில கதைகளில் இதைச் சொல்ல இருந்தேன்.

ஆபிரகாம் என்ர பெயர் எல்லோருக்கும் தெரிந்ததாகையால் அதை பயன்படுத்தினேன்.

 
At 7:26 PM, Blogger G.Ragavan said...

பைபிள் கதைகளை படிக்க மகிழ்சியாக இருகிறது. இன்னும் நிறைய தாருங்கள்.

 
At 7:45 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ராகவன்.. உங்களை எதிர்பார்த்திருந்தேன். வருகைக்கு நன்றி. னம் ஒரு கதையாவது பதிக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்

சனி ஞாயிறு விடுமுறை :)

 
At 10:33 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

சிம்பிளான நடையில எழுதறீங்க சிறில்..

படிக்கறதுக்கு நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்..

பாலா ரிலிஜியஸ்லி சொன்னது 'அக்கறையா' உங்க கதைகளை விடாம படிக்கிறேன்னு சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன். நீங்க நினைச்ச 'பக்தி'யுடன் இல்ல. என்ன பாலா சரியா?

 
At 6:56 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜோசப் சார்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

பால சொன்னதை புரிந்துகொண்டேன் இருந்தாலும் இரு அர்த்தங்களை சொல்லக்கூடிய 'Relegiously' என்கிற வார்த்தை உபயோகம் நல்லா இருந்துச்சு. ஆங்கிலத்தில் இதை PUN என்கிறார்கள். அதை சுட்டிக்காட்டினேன்.

தொடர்ந்து ஆதரவு தாருங்கள். (தேர்தல் தாக்கம்)

 
At 9:48 AM, Blogger Boston Bala said...

பனி நிறையவே வந்திருந்தது. நாம அவுட்சோர்ஸிங் செய்துவிடுவதால், உடல் உழைப்பில்லை :-)
---
நன்றி டிபியார் சார்.

 
At 10:10 AM, Blogger பரஞ்சோதி said...

ஆபிரஹாம் கதையை மீண்டும் படிக்கிறேன். தொடருங்கள்.

 

Post a Comment

<< Home