3/22/2006

30. பயணத்தில் தடைகளும் கொடைகளும்

செங்கடல் பகுதியிலிருந்து பயணம் மீண்டும் புறப்பட்டது. இப்போது ஒரு பாலை வழியே நடக்க நேர்ந்தது, நீரின்றி தவித்த மக்கள் மோயீசனிடம் குறை கூறினர்.

விரைவில் ஒரு நீரூற்றை கண்டனர் ஆனால் அதிலிருந்த நீர் கசந்தது. மோயீசன் கடவுளிடம் முறையிட அவர் ஒரு மரத்தைக் காட்டி,"அந்த மரத்தை வெட்டி இந்த ஊற்றில் போடுங்கள்" என்றார். மரத்தை நீரில் போட்டதும் நீர் சுவைத்தது. எல்லோரும், கால்நடைகளும் தாகம் தணித்தனர்.

பின்னர் எலிம் எனும் பாலைவனச் சோலை பகுதிக்கு வந்து முகாமிட்டனர்.

கடவுளின் மேகத்தூண் எலிமைக் கடந்து சென்றது எபிரேயர்களும் பின் தொடர்ந்தனர். இப்போது பயணம் கடினமான வறண்ட வனங்களுக்குள்ளாய் சென்றது. மக்கள் உணவின்றி வாடினர் மோயீசனிடம் மீண்டும் முறையிட்டார்கள்.

கடவுள் மோயீசனிடம்,"கடவுள்தான் இவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார் எனக் காட்டும்படிக்கு இவர்களுக்கு வானிலிருந்து உணவு அளிப்பேன். அவரவர் தங்கள் தேவைக்கேற்ப இந்த உணவை எடுத்துக்கொள்ளட்டும். தேவைக்கதிகம் எடுக்க வேண்டாம், ஆறாம் நாள் மட்டும் இரண்டு மடங்கு சேகரிக்கட்டும், ஏனெனில் ஓய்வு நாளான ஏழாம் நாள் உணவு வழங்கப்படாது". என்றார்.

கடவுள் வாக்களித்தது போல அடுத்த நாள் காலை வானிலிருந்து மாவு போன்ற ஒன்று பூமியில் விழுந்து கிடந்தது. காடை போன்ற ஒரு பறவையும் இவர்கள் உண்ணக்கிடைத்தது. மக்கள் மாவை வைத்து ரொட்டி செய்து உண்டனர். இந்த உணவுக்கு மன்னா எனப் பெயரிட்டனர்.

எபிரேயர் கானானை அடையும் வரை இந்த உணவு வானிலிருந்து வழங்கப்பட்டது.

3 Comments:

At 11:24 AM, Blogger பரஞ்சோதி said...

சிரில், நிறைய கதை சொல்லிட்டீங்க போல, கொஞ்சம் வேலை, அதான் முழுசா படிக்கலை, விரைவில் படிச்சு கருத்து சொல்கிறேன்.

 
At 1:19 AM, Blogger G.Ragavan said...

நானும் ரெண்டு மூனு கதைய விட்டிருந்தேன். இப்பப் படிச்சிட்டேன். :-)

 
At 1:49 AM, Blogger Esha Tips said...

hi a very good job you are having nice to seee............

 

Post a Comment

<< Home