5/17/2006

31. பாறை(லை)யில் நீர்

முந்தைய கதைகளில் மோயீசன்/மோசஸ் எபிரேயர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை படித்தோம். இதோ பயணம் இன்னும் தொடர்கிறது...

ரெபிடிம் என்னும் இடம் வந்ததும் முன்சென்ற மேகம் நின்றது. எபிரேயர் கூடாரமிட்டு, தங்கி ஓய்வெடுப்பதற்கான அடையாளம் அது.

ரெபிடிமில் காலம் செல்லச் செல்ல எபிரேயர் தண்ணீரின்றி தவிக்கத் துவங்கினர், மோயீசனிடம் முறையிட்டனர்.

மோயீசன் கடவுளிடம்," இதோ இவர்கள் என்னை கல்லால் அடித்து கொன்று போடுவார்கள் போலுள்ளது. இவர்களின் தாகம் தீர என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

கடவுள் மோயீசனிடம்,"ஓரோப் மலைக்குச் சென்று அங்குள்ள பாறை ஒன்றில் உன் கைத்தடியால் தட்டு" என்றார்.

மோயீசனும் பாறை ஒன்றின் மேல் தட்ட அருவிபோல நீர் பாய்ந்தது.

எபிரேயர் பாலைவனத்தில் குளிர் நீர் அருந்தி தாகம் தணிந்தனர்.

4 Comments:

At 2:04 AM, Anonymous Anonymous said...

நல்ல பணி.. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

visit

www.pray.wordpress.com

 
At 7:33 AM, Blogger Leena Paul said...

Naan idhuvarai paarthathileye romba different-ana blog!

Good Job Cyril!

 
At 10:32 PM, Blogger ரவி said...

தலை, உங்கள் கேள்விக்கு பதில் தந்திட்டேன்.

 
At 5:02 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி நண்பர்களே.

என்ன ரவி. என்ன கேள்வி என்ன பதில்?

 

Post a Comment

<< Home