3/09/2006

23. கனவு நினைவானது

பஞ்சம் எகிப்தில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுமிருந்தது. ஜோசப்பின் தந்தை இஸ்ராயேலின் கானான் நாட்டிலும் கடும் பஞ்சம் வந்தது.

இஸ்ராயேல் தன் மகன்களை அழைத்து," எகிப்தில் தானியங்கள் கிடைக்கின்றன, போய் வாங்கி வாருங்கள்." என்றார். ஜோசப் இறந்ததாக நினைத்திருந்ததால் தன் கடைசி மகன் பெஞ்சமினை யாக்கோபு(இஸ்ராயேல்) மிகவும் விரும்பினார், மற்ற மகன்களோடு அவனை எகிப்துக்கு அனுப்பவில்லை.

நெடுநாள் கடந்து ஜொசப்பின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்தனர். ஆளுனான ஜோசப்பிடம் போய் தலை வணங்கி நின்றனர்.

ஆளுனரான ஜோசப் எகிப்து மன்னன் தனக்கு வைத்த எகிப்திய பேரில் அறியப்பட்டதாலும், 20 வருடங்கள் கழிந்திருந்ததாலும், தங்கள் சகோதரன் ஜோசப்தான் ஆளுநன் என அவர்களால் அறியமுடியவில்லை.

ஜோசப் தன் சகோதரர்களை கண்டுகொண்டான். ஆனால் அவர்கள் பழையபடி கொடுமைக்காரர்களாயிர்ப்பார்களோ என பயந்தான். அவர்களை சோதிக்கும்படி,"நீங்கள் எகிப்தை வேவு பார்க்க வந்திருக்கும் உளவாளிகள் எனக்கூறி சிறையிலடைத்தான்". அவர்கள் ஜோசப்பிடம்,"நாங்கள் இஸ்ராயேலின் மக்கள். தானியம் வாங்கத்தான் வந்திருக்கிறோம் எங்களுக்கு இன்னுமொரு தம்பி இருக்கிறான் அவன் எங்கள் தந்தையோடு இருக்கிறான்", என்றனர்.

ஜோசப் உடனே"அப்படியானால் போய் உன் தம்பியை அழைத்து வாருங்கள் நீங்கள் வரும்வரை இரண்டாமவன் யூதா சிறையிலிருப்பான்" என்றான். தன் வேலையாட்களை அழைத்து,"இவர்களுக்கு தானியங்கள் வழங்குங்கள். அவர்கள் தரும் காசை திரும்ப பைகளில் போட்டுவிடுங்கள்" என்றான்.

யூதா தவிர மற்ற சகோதரர்கள் பயந்தபடியே கானானுக்கு வந்தனர். தங்கள் தானியப் பைகளில் தாங்கள் கொடுத்த காசு கிடப்பதைப் பார்த்து மேலும் பயந்தனர். தந்தையிடம் நடந்ததைக் கூறி பெஞ்சமினை கூட்டிச்சென்றால் யூதாவை திரும்பப் பெறலாம் என்றனர்.

எற்கனவே ஜோசப்பை இழந்ததால் பெஞ்சமினை அனுப்ப இஸ்ராயேல் பயந்தார். இருப்பினும் தானியங்கள் எல்லாம் தீர்ந்து போனதும் மீண்டும், பெஞ்சமினுடன், தன் மகன்களை அனுப்பி வைத்தார்.

இந்தமுறை ஜோசப் அவர்களை தன் அரண்மனைக்கு அழைத்து விருந்து வைத்தான். ஆனால் தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொல்லவில்லை.

மீண்டும் தானியங்களோடு அவர்களை அனுப்பினான் ஆனால் இந்த முறை பெஞ்சமினின் பைக்குள் தன் ரசக் கோப்பையை போட்டு வைக்கச்சொன்னான். தன் சகோதரர்கள் எகிப்தின் எல்லையை எட்டுமுன் அவர்களை நிறுத்தி தன் கோப்பையை திருடிவிட்டார்கள் என அவர்களை பிடித்து வரச் செய்தான்.

தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என சகோதரர்கள் சொல்ல, பைகளை சோதனையிட்டான். "இதோ பெஞ்சமினின் பையில் என் கோப்பை உள்ளது இவனை மட்டும் நான் கைது செய்கிறேன்"என்றான் ஜோசப்.

தன் தந்தைக்கு பெஞ்சமினை பாதுகாப்பாக கொண்டுவருவோம் என வாக்களித்திருந்த சகோதரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். "இவன் அண்ணன் ஜோசப் இறந்து விட்டான், இவனே எங்கள் தந்தைக்குச் செல்ல மகன், இவன் எங்களோடு வரவில்லையென்றால் அவர் இறந்து போவார். எங்களால் அதை தாங்க முடியயது." என்றனர்.

ஜோசப் இத்தனை சோதனைகளுக்குள் தன் சகோதரர்கள் திருந்தியிருப்பதை உணர்ந்து தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொன்னான்.

பின்னர் அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொடுத்து போய் நம் தந்தையையும் உறவினர்களையும் அழைத்துவாருங்கள் என்றான். அவர்களும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் தந்தைக்குச்சொல்லி அவரை எகிப்துக்கு அழைத்து வந்தனர்.

பாரோ ஜோசப்பின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் எனவே அவன குடும்பத்தை வரவேற்று எல்லா வசதிகளும் கொடுத்து வாழவைத்தான்.

தன் சகோதரர்களுக்கு மேலாய் உயர்வான் என்கிற ஜோசப்பின் கனவு நனவானது.

5 Comments:

At 9:41 AM, Blogger G.Ragavan said...

பாசமும் அன்பும் வாழ வைக்கும். நல்வழிப்படுத்தும் தன்மை அன்பிற்கு உண்டு. அதைத்தான் வள்ளுவர் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார். நல்ல கதை சிறில். எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.

 
At 10:04 AM, Blogger Boston Bala said...

---பெஞ்சமினின் பைக்குள் தன் ரசக் கோப்பையை போட்டு வைக்கச்சொன்னான்---

Somehow I had imagined, JJ was innovative with her infamous arrests by implanting drugs :-) Antha kaalathileye....! hmm

 
At 10:17 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

thanks for the comments guys.
keep reading.. your comments keep me writing.

 
At 1:20 AM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

JJ was innovative with her infamous arrests by implanting drugs :-) Antha kaalathileye....! hmm//

பாலா JJ implants drugs on her enmies with vindictive mind. But Joseph did that with a noble cause, to find out whether his brothers realised their past misdeed..

சிறில் பைபிளில் கூறப்பட்டவைகளை அப்படியே எழுதிவிட்டு நிறுத்திவிடாமல் தங்களுடைய விளக்கத்தையும் இறுதியில் சுருக்கமாக தந்தால் நல்லது.

இல்லையேல் நம்முடைய பழைய வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் சில நிகழ்ச்சிகள் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி பிற மதத்தினர் தவறாகப் புரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

 
At 7:10 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜோசப் சார்,
விளக்கங்கள் தருவது அவசியமில்லை எனத் தோன்றியது. நான் பெரிய மதவாதியல்ல. என் முன்னுரயில் கூறியதுபோல சுவாரஸ்யமாய் கதை சொல்வதே என் நோக்கம். இந்த மாதிரி கதைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன கடவுளால் வழிநடத்தப்படுகிறவார்கள் செய்யும் எந்த செயலுக்கும் நியாயம் கற்பிக்கப்படுகிறது.

கடவுள் நம்பிக்கையுள்ளவர் இந்தக் கதைகளை படித்தால் அவருக்குத் தகுந்த விளக்கம் கிடைக்கும், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விளக்கம் கொடுத்தாலும் விளங்காது.

ஜோசப்பின் கதைக்கு ராகவன் தரும் விளக்கம் கடவுள் நம்பிக்கையின்பேரில், பால சமூகவியல்/அரசியல் கருத்து ஒன்றை வெளிவைக்கிறார், நாம் சொல்லும் கருத்தை பிறர் கொள்வதைவிட அவர்கள் கருத்தை அவர்களே கொள்ளட்டும் என விட்டுவிட்டேன்.

இன்னுமொன்று... கிறிதுவ மதத்தில் குறைகளே இல்லை என நினைக்கிறீர்களா?

 

Post a Comment

<< Home