3/07/2006

19. ஜோசப்பின் வண்ண மேலாடை

யாக்கோபின் 11வது மகன் ஜோசப். ரேச்சேலின் முதல் மகன் யாக்கோபின் செல்லப் புதல்வன். யாக்கோபுக்கு ஜோசப்பின் மேல் அலாதி அன்பு. அவரின் மற்ற மகன்கள் ஜோசப் மீது வெறுப்படைய வைத்தது யாக்கோபின் செல்லம்.

யாக்கோபு ஜோசப்பிற்கு ஒரு அழகிய வண்ணங்கள் நிறைந்த மேலாடை ஒன்றை பரிசளித்திருந்தார்.

ஒருநாள் ஜோசப் தான் கண்ட கனவு ஒன்றை தன் சகோதரர்களுக்குக் கூறினான்,"வயல் வெளியில் நாமெல்லோரும் கதிர்களை கட்டி வைக்கிறோம். திடீரென என் கதிர் கட்டு எழுந்து நிற்கிறது. உங்கள் எல்லோரின் கட்டுக்களும் என் கட்டுக்கு பணிந்து வனக்கம் செய்கின்றன"என்றான்.

ஏற்கனவே ஜோசப்பை வெறுத்த அவன் சகோதரர்கள் மேலும் கோபம் கொண்டனர்.

ஜோசப்பிற்கு இன்னுமொரு கனவு வந்தது,"சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்குவதுபோலக் கண்டேன்" என தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் கூறினான்.


ஒரு நாள் இஸ்ரயேலின்(யாக்கோபு) முதல் பத்து மகன்களும் ஆடு மேய்க்க தொலைதூரம் சென்றனர். அவர்கள் திரும்ப நேரமானதைக் கண்டு யாக்கோபு அவர்களை கூட்டிவரும்படி ஜோசப்பை அனுப்பி வைத்தார்.

ஜோசப்பும் பல ஊர்கள் தேடித்திரிந்து கடைசியில் தன் சகோதரர்களை கண்டான். அவன் சகோதரர்கள் அவனைப் பிடித்து"இந்தக் கிணற்றுக்குள் இவனை இரக்கிவிடுவோம், நம் தந்தை கேட்டால் காட்டு விலங்குகள் இவனை கொன்றுவிட்டதாகச் சொல்லுவோம், அப்போது இவன் கனவுகள் என்னவாகும் பார்ப்பொம்" என்று ஜோசப்பை கட்டி கிண்ற்றுக்குள் இறக்கிவிட்டனர்.

மூத்தவன் ரூபன் தம்பி ஜோசப்பை தப்புவிக்க திட்டம் தீட்டினான்.

ரூபன் ஆடுகளை கண்காணித்திருக்கும்போது சில வியாபாரிகள் ஜோசப் இருந்த கிண்ற்றுப்பக்கம் வந்தனர். ஜோசப்பின் சகோதரர்கள் 20 வெள்ளிக்காக அவனை அடிமையாய் விற்றனர்.

ரூபன் திரும்பிவந்து தன் தம்பியைத் தேடுகையில் மற்றவர்கள் நடந்ததைக் கூறினர்.

இஸ்ராயேல் ஜோசப்புக்கு அளித்த மேலாடையின் மீது ஆட்டின் ரத்தத்தை ஊற்றி "இதை வழியில் பார்த்தோம் இது தம்பியின் ஆடையல்லவா?" என்றனர்.

யாக்கோபு இரத்தம் தோய்ந்த ஆடையைக் கண்டு ஜோசப் இறந்துவிட்டான் என நம்பி துக்கம் கொண்டார்.

ஜோசப் அடிமையாய் எகிப்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.

Joseph and the Amazing Techincolor Dreamcoat என்கிற Andrew Lloyd Webber படம் இந்தக் கதையை பற்றியது. அருமையான படம்.

5 Comments:

At 1:17 PM, Blogger Boston Bala said...

'பாம்பே ட்ரீம்ஸ்' ஆண்ட்ரூ லாயிட் வெப்பரா! படம் பார்த்ததில்லை; பார்க்க முயல்கிறேன். இனிமேல் 'ஜோசப்' பெயரைக் கேட்டால் ஏ.ஆர். ரெஹ்மான் நினைவுக்கு வரப் போறார் :-)

 
At 1:43 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அவரேதான்..
சில பாடல்கள் அருமையாயிருக்கும். அடுத்த (21வது) கதையில் பாரோ வருவார்.

படத்தில் பாரோ எல்விஸ் ஸ்டைலில் ஒரு பாடல் பாடுவார்.. ரெம்ப நல்ல பாடல் காட்சியமைப்பு.

Jesus Christ- Super Starகூட வெப்பர் படம்தான்.

 
At 5:59 AM, Anonymous Anonymous said...

Good job Cyril! God Bless your efforts... Finish up what you have started.

If you find time, please visit my site at http://ca.geocities.com/mistertoronto/index.html

 
At 6:09 AM, Blogger Vaanathin Keezhe... said...

அருமையான பணி. ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

 
At 10:37 AM, Anonymous Anonymous said...

Read the same story in chapter 'Yousef' from Quran, u will like it.

 

Post a Comment

<< Home