2/24/2006

13. ஆபிரகாமின் பலி

கடவுள் ஒருநாள் ஆபிரகாமை அழைத்து,"நீ அன்பு கொண்டிருக்கும் உன் மகனான ஈசாக்கை(Isaac) கூட்டிக்கொண்டு போய் நான் உனக்கு காண்பிக்கும் மலை மீது எனக்காக பலியிடு." என்றார்.

ஆபிரகாமும் அதிகாலையில் எழுந்து தம் வேலைக்காரர்கள் சிலரோடு பலிகொடுக்கத் தேவையான விறகுகளை எடுத்துக்கொண்டு மலை நோக்கி பயணித்தார். மூன்றாம் நாள் மலையடியில் வேலைக்காரர்களை விட்டுவிட்டு யாக்கோபோடு தனியாக மலையில் ஏறினார்.

சிறுவன் ஈசாக் ஆபிரகாமை நோக்கி,"அப்பா, பலி கொடுக்க விறகுகள் மட்டுமே இருக்குதே ஆடு எங்கே?" என்றான். ஆபிரகாம்,"அது பற்றி கடவுள் பார்த்துக்கொள்வார்" என்றார்.

கடவுள் குறித்த இடத்தை அடைந்ததும். விறகுகளால் பலிபீடத்தை உண்டாக்கி தம் மகனை அந்த பீடத்தின் மேல் கிடத்தினார்.

ஈசாக்கை பலிகொடுக்க ஆபிரகாம் கத்தியை எடுக்கும்போது கடவுளின் தூதன் "ஆபிரகாம்! ஆபிரகாம்!" என அழைத்தார். ஆபிரகாம்,"இதோ உன் அடியேன்" என்றார். "உன் மகனை ஒன்றும் செய்யாதே. நீ உன் ஒரே மகனையே பலியிட முன்வந்து கடவுளுக்கு பயந்தவன் என்பதை நிருபித்துவிட்டாய் இதோ புதரில் இருக்கும் அந்த ஆட்டுக்குட்டியை உன் மகனுக்கு பதிலாக பலிகொடு" என்றார்.

ஆபிரகாமும் புதரில் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டெடுத்து பலிதந்தார்.

5 Comments:

At 12:58 PM, Blogger பரஞ்சோதி said...

சிறில் ரொம்ப நாளாக நிறைய கதைகள் படிக்கவில்லை.

ஆபிரகாமின் பக்தி என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது.

பிள்ளைக்கறி சமைத்த நாயனார் கதை நினைவுக்கு வருகிறது.

 
At 1:42 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி பரஞ்சோதி
நாயனார் கதை நானும் படித்திருக்கிறேன்.

 
At 2:12 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

ஆபிரகாமின் மகன் யாக்கோபா?
பேரனல்லவா?
பலியிடக் கொண்டு செல்லப்பட்டது ஆபிரகாமின் இளையமகன் ஈசாக் அல்லவா?
ஈசாக்கின் இளையமகன் தானே யாக்கோபு.

ஒருமுறை கவனிக்கவும்.
எங்கே ஞானபீடம்?
ஆதியாகமத்திலிருந்து ஒரு வசனம் எடுத்துவிடும்.

 
At 2:17 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

யோவ் சிறில்,
கடந்த கதையெல்லாம் சரியாக வந்திருக்கிறதே!
இந்தக் கதையில் மட்டும் சறுக்கியதேனோ?

 
At 2:40 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

சொதப்பிட்டேன் வசந்தன் மன்னிக்கவும். திருத்திவிட்டேன். :(

யாக்கோபின் கதையை படித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் இப்படி ஆகிவிட்டது.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

 

Post a Comment

<< Home