2/24/2006

12. ஈசாக்கு

கடவுள் வாக்களித்தது போலவே சாரா வயதான காலத்தில் கருத்தரித்தாள். அவளுக்கு ஆண்பிள்ளை பிறந்தது, ஈசாக்கு என்று பெயரிட்டனர்.

ஈசாக்கு பால் குடிக்க மறந்த தினத்தன்று ஆபிரகாம் ஒரு மாபெரும் விருந்து வைத்தார். அந்த விருந்தின்போது ஆபிரகாமுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த இஸ்மாயேலும் ஈசாக்கும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். சாரா இதைப் பார்த்ததும் தன் மகனுக்கு கிடைக்கும் மரியாதைகளும் உரிமைகளும் இஸ்மாயேலுக்குப் போய்விடுமோ என அஞ்சினாள். ஆபிரகாமிடம் ஆகாரையும் இஸ்மாயேலையும் வீட்டைவிட்டு அனுப்பிவிடுமாறு கூறினாள்.

ஆபிரகாம் இஸ்மாயேலின்மீது மிகுந்த அன்புகொண்டவராயிருந்தார். கடவுள் அவரிடம், "சாரா சொல்வதைக் கேள். உன் மகன் இஸ்மாயேல் வழியும் ஒரு பெரிய குலத்தை ஏற்படுத்துவேன்" என்றார். ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மாயேலையும் நீரும் உணவும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு போகச்சொன்னார்.

ஆகாரும் சிறுவன் இஸ்மாயேலும் பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் கொண்டுவந்த உணவும் நீரும் தீர்ந்துபோனது. நிலமை மிகவும் மோசமாக, ஆகார் இஸ்மாயேலை ஒரு புதர் மறைவில் வைத்துவிட்டு அம்பு எறியூம் தூரத்தில் போய் நின்றாள். இஸ்மாயேல் உரக்க அழுதுகொண்டிருந்தான்.

அப்போது கடவுளின் தூதன் ஆகாருக்குத்தோன்றி,"இதோ இஸ்மாயேலின் அழுகையை கடவுள் கேட்டார். அவன் வழியும் ஒரு பெரிய சந்ததியை உருவாக்குவார் என்றார்." பின்பு கடவுள் ஆகாரின் கண்களை திறந்தார், அவளும் அங்கே நீர் நிலை இருப்பதை கண்டாள்.

ஆகாரும் இஸ்மாயேலும் பாலை நிலங்களிலுள்ள வனங்களில் வாழத்துவங்கினர். இஸ்மாயேல் மிகச்சிறந்த வேட்டைக்காரனாக மாறினான்.

2 Comments:

At 1:04 PM, Blogger பரஞ்சோதி said...

இஸ்மாயிலின் வழித்தோன்றல் தான் இஸ்லாமியர்கள், சரி தானே.

இறைவனே விரும்பி இரு சந்ததியினரையும் படைத்த போது, அதை ஏன் மனிதன் ஏற்க மறுக்கிறான்?

 
At 1:45 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

//இஸ்மாயிலின் வழித்தோன்றல் தான் இஸ்லாமியர்கள், சரி தானே.//

அப்படித்தான் கேள்வி பட்டிருக்கிறேன்.

//இறைவனே விரும்பி இரு சந்ததியினரையும் படைத்த போது, அதை ஏன் மனிதன் ஏற்க மறுக்கிறான்?//

உலகெங்கும் சகோதரர்கலுக்குள்ளேதான் பகை நிலவுகிறது. எல்லாமே சொத்துச் சண்டைதான். குடும்பங்களில் நடக்கும் சண்டைகள்போலதான் நாடுகளுக்கிடையே பெரிய அளவில் நடக்கின்றன.

 

Post a Comment

<< Home